Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு …!!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை  முடிவு செய்துள்ளது.

பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப கூடிய மனநிலையில் இருக்கிறார்களா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ என பல்வேறு விதமான பள்ளிகளில் இருக்கக்கூடிய நிலையில் பெற்றோர்களுடைய கருத்துக்களை  நேரடியாக தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் கூட ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

எனவே மாநில அரசுகள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களிடம் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள் அதன் அடிப்படையிலான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |