Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி….. உத்தரவு போட்டு மாஸ் காட்டும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் மேலும் 7 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்புக் கல்வி ஆண்டிலேயே செயல் பட அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடப்புக் கல்வி ஆண்டில் செயல் படுவதற்கு அனுமதி வழங்கியும், ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர்கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் 2020-21 ஆம் நடப்பு கல்வியாண்டில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் வானூர் (திருச்சிற்றம் பலம் கூட்டுரோடு),விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப் புத்தூர், நாகை மாவட்டம் குத்தாலம், ராணிப்பேட்டை மாவட்டம் ஜம்புகுளம் ஆகிய இடங்களில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், கோவை மாவட் டம் புலியக்குளத்தில் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என 7 கல்லூரிகள் துவக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்தக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் மற்றும் 13 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 7 கல் லூரிக்கும் 11 ஆசிரியர்கள், 91 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |