Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆலோசனையால் திடீர் திருப்பம் …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும், மீண்டும் கல்வி நிலையம் எப்போது தொடங்கும் ? கல்வியாண்டு எப்போது ஆரம்பிக்கும் என்று பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் ஆவப்போது பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வருகின்றது.

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என்று நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறப்பு குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |