நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தளர்வில் மாநில அரசு பள்ளிகளை திறந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்து முடிவு எடுக்கலாமா என்று தமிழகம் முழுவதும் இன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வகுப்பறைகளில் கிருமிநாசினி இருக்கவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களின் உடல்நிலை வாரம் ஒருமுறை சோதனை செய்ய வேண்டும். வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நடக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு பிறகு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.