அறிவியல் கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து நடத்தும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள்.
இதில் சிறந்த கண்டுபிடிப்புகளாக ஆனைமலை வி.ஆர்.டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும் கோவில் நிலங்களில் காடு வளர்த்தல் கருவிகளை கண்டுபிடித்ததற்கும் அதற்காக சிறந்த விளக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசியதற்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரிவானா, பாத்திமா, பிரவீனா, ஷாலினி, வசுந்தரா உள்ளிட்ட மாணவிகள் கண்டுபிடிப்பில் அசத்தியத்திற்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.