எதற்காக ஆண்கள் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு
பெண்களைப் பொறுத்தவரை காலில் கொலுசு, காதில் கம்மல், திருமணத்திற்கு பிறகு கால் விரலில் மெட்டி அணிவார்கள். அதில் கொலுசு அணிவதற்கும் மெட்டி அணிவதற்கும் அறிவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றது. அதை போன்று ஆண்கள் இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கும் அறிவியல் சார்ந்த காரணம் உண்டு.
பெண்களை விட ஆண்களுக்கு குடலிறக்க நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோயை வராமல் தடுக்கவே அரைஞான் கயிறு கட்டப்படுகிறது. உடல் எடை அதிகம் உள்ள ஆண்களுக்கு அதிக அளவில் குடலிறக்க நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த நோய் இருந்திருக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆரம்பகாலத்தில் கருப்பு நிறத்தில் கட்டப்பட்ட அரைஞான் கயிறு காலப்போக்கில் வெள்ளி மற்றும் தங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரைஞான் கயிறுகளாக மாறின. ஞான் என்ற சொல்லுக்கு கயிறு என பொருள் உடலின் சரிபாதியை அரை எனவும் இரண்டையும் சேர்த்து அரைஞான் எனும் சொல் உருவானது.
அரைஞான் கயிறு கட்டப்படுவதால் குடலிறக்க நோய் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மேலும் குழந்தைகளுக்கு அரைஞான் கயிறு கட்டாமல் இருந்தால் கட்டிவிடுங்கள். ஆண்கள் அரைஞான் கயிறு கட்டிக் கொள்வது அவசியமான ஒன்று