Categories
தேசிய செய்திகள்

வெப்பம் அதிகரிக்க… கொரோனா குறைகிறதா?.. ஆய்வில் வெளியான தகவல்!

வெப்பநிலை அதிகரிப்புக்கும் கொரோனா பரவல் குறைவிற்கும் 85% வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

நாக்பூரில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதிலும் சராசரி வெப்பநிலை அதிகரித்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொற்று பரவுவது குறைந்திருப்பது போன்றவற்றிற்கு இடையே 85% தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகம் நீரி. கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தை மற்றும் வெப்பநிலை புள்ளி விவரத்தையும் வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு சராசரி வெப்பநிலை  ஈரப்பததிற்கும்  கர்நாடகா, மராட்டியத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகளின்  அளவிற்கும்  இடையில் இருக்கும் தொடர்பை பற்றி ஆய்வு செய்துள்ளது. இந்த இரண்டு  மாநிலங்களிலும் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் அதிகரித்த பொழுது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என நீரி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் இருக்கும் வெப்பநிலை கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்தாலும் வெப்பநிலையினால் ஏற்படும் நன்மைகளை விட ஊரடங்கு மற்றும் சமூக விலகினால் ஏற்படும் நன்மைகள் அதிகம் உள்ளது.

நீரி, மூலோபாய நகர்புற மேலாண்மை மையத்தின் விஞ்ஞானி ஹேமந்த் பெர்வானி கூறியபொழுது “ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை காரணமாய் தொற்று பரவல் அளவு போன்றவற்றில் மட்டும் நாங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. ஊரடங்கு சமூக விலகளையும் சேர்ந்திருந்தோம். அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படும் நன்மைகள் இல்லாமல் போகும்” என கூறினார்

Categories

Tech |