Categories
உலக செய்திகள்

மரபணு மாற்றம் “வெள்ளை நிறமிப் பல்லி” விஞ்ஞானிகள் சாதனை..!!

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard)  உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். 

ஜார்ஜியா நாட்டின்  பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர்.

Image result for It'll Be All White: Scientists Create Albino Lizards ... Researchers from the University of Georgia used CRISPR-Cas9

பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக  புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய பல்லி வகை ஓன்று உருவாக்கப்பட்டது.

Image result for It'll Be All White: Scientists Create Albino Lizards ... Researchers from the University of Georgia used CRISPR-Cas9

இது குறித்து கூறிய விஞ்ஞானிகள்,  இந்தப் பல்லியினங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்றும்,  இதன் மூலம் மனித குலத்தில் ஏதேனும் மாற்றங்கள் வருமா என்பதை கணிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |