Categories
உலக செய்திகள்

குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்…. ‘புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு’…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி….!!!!

இஸ்ரேல் நாட்டில் ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் மக்கள் 2022-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நிலையிலும் கொரோனா உலகை விட்டு ஒழிந்த பாடில்லை.

அதோடு மட்டுமில்லாமல் உருமாற்றம் அடைந்த ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களும் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது.

இந்த ‘ப்ளோரனா’ புதிய வைரஸ் இஸ்ரேல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்றிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ‘ப்ளோரனா’ வைரஸ் கொரோனாவுடன் இணைந்து கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த புதிய வைரசால் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |