Categories
உலக செய்திகள்

“என்னது?”… புதிய கண்டம் உருவாகப்போதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

எனவே, இன்னும் 200-லிருந்து 300 மில்லியன் ஆண்டுகளில் புதிதாக கண்டங்கள் தோன்றக்கூடிய  வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த சமயத்தில் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்கள் மறைந்துவிடவும் வாய்ப்புகள் இருக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா கண்டமானது, ஆசியாவை நோக்கி சுமார் 7 சென்டிமீட்டர் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, 300 மில்லியன் வருடங்களுக்குள் நிச்சயம் இந்த மாற்றங்கள் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |