Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடு வழியில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியில் பாலன்-கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவுமியா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் உடல் நலம் சரியில்லாததால் சந்தோஷை, பாலன் மற்றும் அவரது மனைவி கற்பகம் இருவரும் ஸ்கூட்டரில் ஓமலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சந்தைமடம் பேருந்து நிறுத்தம் அருகே தர்மபுரி-சேலம் சாலையில் வந்து திரும்பியபோது சேலம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலன், கற்பகம் மற்றும் அவர்களது மகன் சந்தோஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலன், கற்பகம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து சந்தோஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த பெனில்பிரைட் என்பவரும் கீழே விழுந்ததில் பலத்தகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் கூறியபோது “பெனில்பிரைட் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கல்லூரி படிப்பு சம்பந்தமாக ஐதராபாத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, பெங்களூர் வழியாக சேலம் திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் விபத்து நடந்து உள்ளது. இதனிடையில் பெனில்பிரைட் ஓட்டி வந்தது பந்தயங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஆகும்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |