Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஸ்கூட்டரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காந்திநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி முருகன் தனது ஸ்கூட்டரில் மங்கலம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகன் கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து முருகன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த ஸ்கூட்டரை வாலிபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இதனைப் பார்த்து காவல்துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சேலம் பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பதும், அவர் ஸ்கூட்டரை திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |