விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். உங்களுடைய மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தனலாபமும் நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். உற்சாகம் பிறக்கும், உத்தியோக மாற்றம் கூட ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டியவை தாமதப்பட்டு தான் வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதையும் நிதானித்து செய்யுங்கள். இறை வழிபாட்டுடன் காரிகளை தொடங்குங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் பொருளாதாரமும் ஓரளவு சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு செயல்படுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.