Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நண்பரின் ஆலோசனை பயன்தரும்”… சமூகத்தில் புகழும் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் நாளாக இருக்கும். நண்பரின் ஆலோசனை பயன்தரக் கூடிய அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். அதிக பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று குடும்ப பிரச்சினைகள் தீரும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். சோர்வில்லாமல் எப்பொழுதுமே உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். நல்ல பெயர் ஏற்படும். சமூகத்தில் புகழும் உண்டாகும். மாணவர்கள் சக மாணவருடன் அனுசரித்து செல்லுங்கள். அது போதும்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மையை  பெற முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லை. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து செல்வங்களையும் நாம் பெற முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |