விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர் வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் இன்று பூர்த்தியாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று முன்கோபத்தை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடத்தை படிப்பது கூடுதல் மதிப்பெண் எடுக்க உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்து பயனடைய முயலு ங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று நண்பர்களிடம் அதிகமாக உதவியை எதிர்பார்த்தால் ஏமாற்றம் கூடும். அதே போலவே நண்பரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். மஹா அன்னாபிஷேகம் நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வம் ஏற்படும். தயவு செய்து இதனை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்