விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாளாகவே நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அது போல சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் கூடும். உழைப்புக்கேற்ற பணம் கிடைக்கும்.
வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். அதுமட்டுமில்லாமல் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்