விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் பொறாமையினால் பரிகாசம் செய்யக்கூடும். அவரிடம் தயவுசெய்து விலகி இருங்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற காலதாமதம் தான் ஏற்படும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். தயவு செய்து யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மையை சேர்த்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்