Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு.. “புதிய முயற்சிகளை தள்ளிப்போடுங்கள்”.. பொறுமையாக இருங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! உடல் ஆரோக்கியம் இன்று பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள்.

வீண் செலவைக் குறைப்பதற்கு திட்டமிட்டு செயல்படுவது மிகவும் சிறப்பு. பெண்களுக்கு ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். இன்று பெண்களுக்கு அதிஷ்டமான வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று கூடுமானவரை யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். பொறுமையாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். எதையுமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் காக்கைக்கு அன்னம் இடுவதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை  ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |