விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும் நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்பு அடைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்களும் செல்ல நேரிடும். நல்ல பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும்.
அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேலையாட்களால் சின்னதாக பிரச்சினை வரக்கூடும். கூடுமானவரை நீங்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைத்தையும் நாம் சரி செய்து விடலாம். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டுத் துறையில் இன்று ஆர்வம் செல்லும்.
இன்று கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்