விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இயற்கை சூழ்நிலைகளுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். நிதியுதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் கவனமாக செயல்படுங்கள். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் அனுசரித்துச் செல்வது மிகவும் சிறப்பு. இன்று குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும் என்பதால் பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் அன்பாக பழகுங்கள்.
விளையாட்டு துறையிலும் உங்களுக்கு இன்று நாட்டம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பை கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தையும் நீக்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்