Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “திருமண தடை விலகி செல்லும்”.. ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமண தடை விலகி செல்லும். இன்று துன்பம் வருவது போலிருக்கும் தவிர ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பேச்சு உங்களுக்கு எதிர்ப்பை இன்று உண்டாக்கிக் கொடுக்கும். கூடுமானவரை யோசித்து பேசுங்கள் அது போதும். ஆன்மிக எண்ணங்கள் இன்று அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றமான சூழ்நிலையும் அடையகூடும்.

தாங்கள் மேன்மை அடைந்திட புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும். வெளிநாட்டு வியாபாரமும் சிறப்பாக இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இன்று ஏற் படும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி என்பதால் குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த குபேர கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதாவது குபேரர் அவர்கள் திரு அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள். இன்று அவருடன் நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு செல்வம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம். கூடுமானவரை இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டு கிரிவலம் சென்று வந்து நம்மளுடைய செல்வநிலையை வைத்துக்கொள்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6:30 மணிக்குள் குபேரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு உங்களுடைய செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |