Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும்”.. மனதில் பயம் இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு கையிருப்பை கரைக்க வேண்டி இருக்கும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல மதிப்பை பெறக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் பயம் இருந்து கொண்டே இருக்கும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நிறைவேற்றும் போது பச்சை நிறத்தில் செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |