Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “முக்கிய பணிகளில் கவனம்”.. உழைப்பு அதிகமாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம். முக்கிய பணிகளில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆராவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில்தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதைச் செய்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. இன்று மற்றவருடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். வெளியூர் பயணம் வீண் அலைச்சலை கொடுக்கும். இன்று உழைப்பு அதிகமாக தான் இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் இருந்த தடை விலகி நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

‘ஆசிரியர்களிடம் நல்ல பெயரை எடுக்கக்கூடும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |