Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “செயல்களில் கவனம் இருக்கட்டும்”.. சவாலான காரியங்கள் வேண்டாம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறை கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். சிலரின் நயவஞ்சக பேச்சு உங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்க கூடும். பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை மட்டும் காணப்படும்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு ஓரளவு திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் ஓரளவு சாதகமாக முடியும். பழைய பிரச்சினைகள் கொஞ்சம் தலை தூக்கும். கடன் விவகாரங்கள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். இன்று உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சுமாராக தான் இருக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |