Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “அன்பின் குணம் நிறைந்திருக்கும்”.. தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை பின்பற்றுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று மனம் மகிழும் சம்பவங்கள் ஏற்படும். மன நிம்மதியும் மன திடமும் இன்று உருவாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று காணப்படுவீர்கள். திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்மை ஏற்படும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவச் செல்வங்கள் மட்டும் கொஞ்சம் உழைத்து படியுங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

விளையாட்டை ஏறக்கட்டி விட்டு படிப்பில் கவனத்தைச் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |