விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். இன்று கடுமையான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்பவரால் இருந்து வந்த காரியத்தடை நீங்கும்.
மன தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்த இடைவெளி குறையும். ஆன்மீக பயணம் செல்லும் நிலை உருவாகும். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்