Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “இன்று கஷ்டம் நீங்கி சுகம் ஏற்படும்”… அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்..!!

குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று வீண் வம்புக்கு செல்லாமல்  இருப்பது மிகவும் நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். இன்று கஷ்டம் நீங்கி சுகம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் ஏற்படும்.

உங்களுடைய வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனம் வீடு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இதை மட்டும் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான  காரியத்திற்கு  செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |