Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “புகழ் பாராட்டு கிடைக்கும்”.. வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறி செல்வீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாகவே இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.

அரசியல் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். கூடுமானவரை மற்றவரிடம் பேசும்போது வாக்குவாதங்கள் இல்லாமல் பேச வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். மனைவி பேசுவதை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பதில் கொடுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பாடத்தை கவனித்துப் படியுங்கள், எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |