Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம்”… நேரம் தவறாமல் செய்யவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். கூடுதல் பண வருமானம் கிடைக்கும். உறவினர்களுடன் சந்தோச சந்திப்பு ஏற்படும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.

‘உடன் பணிபுரிவோரால் அனுசரணைகள் உண்டாகும். உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடவும் கூடாது. இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். வாகனத்தில் செல்லும்போது எப்பொழுதுமே பொறுமையாகவே செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |