விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று உத்தியோகத்தில் உயர்வு கிட்டும் நாளாக இருக்கும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பார்கள். நண்பர்களுக்காக சில காரியங்களை செய்ய முன்வருவீர்கள். இளைய சகோதரத்தால் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடும். கூடுமானவரை பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அன்னியர் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும்.
சொத்துக்கள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். மனைவியின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருங்கள். எதிர்பாலித்தனவருடன் பழகும் போது மிகவும் கவனமாகப் பழகவேண்டும். சுறுசுறுப்பு குறைந்து சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். எனவே வீண் அலைச்சலை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்