விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் உண்டாகும். இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியம்.
வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக இன்றையநாள் அமையும். வீண்செலவு அலைச்சலும் கொஞ்சம் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்றையநாள் ஓரளவு ஒன்றாகவே அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்வியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்