விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மாற்றும் சிந்தனை மேலோங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று வீண் செலவு ஏற்படும், காரியங்களில் தாமதம் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும், கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
பழைய பாக்கிகள் சிறிய தாமதத்திற்கு பின்னே வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை ஏற்படும், அதனால் எந்த விஷயத்தையுமே நீங்கள் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்போதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் :6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.