விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று அரசு உதவியில் புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என சில விஷயங்கள் உங்களுக்கு நல்ல பலனையும் கொடுக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் இனிய திருப்பங்களும் இன்று ஏற்படும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகளும் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து விஷயத்திலும் சாதகமான பலனை இன்று கிடைக்கும்.
அரசின் ஆதரவு உங்களுக்கு முழு நிலைப்பாட்டை கொடுக்கும். உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் இருக்கும். இன்று மனம் உற்சாகமாக காணப்படும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.
புதிதாக காதலில் வரையப்படும் கூடிய சூழலும் இன்று இருக்கிங்க பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.