Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…அறிவுத்திறன் அதிகரிக்கும்…தனவரவு சீராகும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாளாக இருக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். பெண்களிடம் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். மருத்துவர்கள் கைவிட்ட சில பிரச்சனைகள் கூட இன்று கடவுள் நம்பிக்கையால் நல்லபடியாக நடந்து முடியும். அதாவது ரொம்ப நாட்களாக உங்களுக்கு தொல்லை கொடுத்த உடல் பிணிகள் சரியாகும். நண்பர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். இதமான சூழ்நிலை இன்று காணப்படும்.

உறவினர் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் கூடும். பிள்ளைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல் நலத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும். பணம் வரவு திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் என்பதை மட்டும் தயவு செய்து விட்டு விட வேண்டாம்.

காதலர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமானவர் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |