Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… “தன்னம்பிக்கை கூடும்”… வீண் செலவு கொஞ்சம் குறையும்..!!

விருச்சிகம் ராசி நேயர்களே…!!  இன்று விருந்தினர்கள் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலை பளு  கொஞ்சம் கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் உதவி உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து இன்று நீங்கள் கவலைப்படுவீர்கள். தேவையில்லாத கவலை எப்பொழுதுமே வேண்டாம். வீண் செலவு கொஞ்சம் குறையும். பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிற கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். நீங்கள் செய்கின்ற காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். இன்று உங்களுக்கு பணவரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை சிவப்பு நிற கைக்குட்டை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்டமான  எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : ஊதா மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |