Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்…ஒத்துழைப்பு கிடைக்கும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    எடுத்து காரியம் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதிர்காலம் இனிமையாக அமைய திட்டங்களை தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு நிலம் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகி செல்லும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நடைபெறும். சுப காரியங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். உத்தியோகத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

அனைவரும் உதவிகரமாக இருப்பார்கள். அக்கம் பக்கம் மட்டும்  கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சிலரால் சண்டைகள் அவ்வப்போது வரலாம். சகோதரர்களிடம் இனிமையாக பேசுங்கள். அதேபோல காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் மட்டும் ஈடுபட வேண்டாம். கூடுமானவரை பேச்சில் நிதானத்தை எப்பொழுதுமே கடைபிடியுங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும் ஆன்மிகத்திற்கு சிறு செலவையும் இன்று நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

இன்று எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாலை நேரங்களில் மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் முக்கியமான பணியை இன்று நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிற உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |