Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…மதிப்பு கூடும்…பதவி உயர்வு கிடைக்கும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!  இன்று உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். எதிர்மறையாகப் பேசி வருடமும் நல்ல நட்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். உங்களுடைய மனைவியை விரும்பி பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எந்த ஒரு காரியமும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாக சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறி செல்விர்கள். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டாலும் சரியான நேரத்திற்கு வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கும். நண்பரிடம் அன்பாக பேசி பேசுவீர்கள் அனைவரிடமும் அன்பாகவே நடந்து கொள்வீர்கள். ஆனால் நீங்கள் இன்று செய்ய வேண்டியது செலவை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத செலவுகளை கண்டிப்பாக செய்யாதீர்கள்.

காதலர்கள் பேச்சில் நிதானம் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவே நன்மையை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |