ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் லண்டனில் நடந்த சீக்கிய இளைஞர் கொலை சம்பவம் பற்றி விவரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று மேற்கு லண்டனின் சௌத்ஹால் பகுதியில் பிரிட்டிஷ் சீக்கிய இளைஞரான ரிஷ்மீத் சிங் மர்மநபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் பிரிட்டன் வாழ் சீக்கிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்த நிலையில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் லண்டனில் நடந்த சீக்கிய இளைஞர் கொலை சம்பவம் பற்றி விவரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.