டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்துக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி..
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் இன்றைய 7ஆவது தகுதி சுற்றுப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது .
இதில் ஸ்காட்லாந்து அணி முதலில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அதே சமயம் அயர்லாந்து அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி – மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் களம் கண்டனர். இதில் ஜார்ஜ் முன்சி 2ஆவது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேத்தியூ கிராஸ் – மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து நல்ல சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
இதில் ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். இதையடுத்து மேத்தியூ கிராஸ் 28 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின் வந்த ரிச்சி பெரிங்டன் அவர் பங்குக்கு 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதேசமயம் தொடக்க வீரர் ஜோன்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 19ஆவது ஓவரில் 55 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) உட்பட 86 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் ஜோன்ஸ் அவுட் ஆனார். கடைசியில் மைக்கேல் லீஸ்க் 17 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Scotland set a challenging target of 177 for Ireland 👊#SCOvIRE | 📝: https://t.co/HAdDN37wJH
Head to our app and website to follow the #T20WorldCup action 👉 https://t.co/76r3b7l2N0 pic.twitter.com/K3Oddb77Oy
— ICC (@ICC) October 19, 2022