Categories
அரசியல் மாநில செய்திகள்

அலறும் மூத்த தலைகள்… அதிரும் கமலாலயம்…அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு.  அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க.

என்னை பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்கேன். தவறு யார் செய்திருந்தாலும்,  நான் விடப் போவது கிடையாது. அது சூர்யா சிவா இந்த விஷயத்துல, தகாத முறையில் பேசி இருக்காரு அப்படின்னு விசாரணை கமிட்டி ரிப்போர்ட்ல இருந்தால், ரிப்போர்ட் வேகமாக கொடுக்க சொல்லி இருக்கேன்.

இரண்டு பேருடைய கருத்துக்களையும் கேட்டு சொல்லனும்னு சொல்லி இருக்கேன். அதே நேரத்துல எப்போதுமே ஒரு நாணயத்திற்கு கூட இரண்டு பக்கம் இருக்கிறது. இரண்டு பக்கத்தையும் விசாரிப்பாங்க. ரிப்போர்ட் என் கைக்கு வந்துச்சுன்னா,  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நமது கட்சியில் விடுவது கிடையாது.

தனிப்பட்ட உரையாடல், தனிப்பட்ட முறையில் பேசுனோம், திமுக கட்சிக்காரங்க மாதிரி நாங்க ஓப்பனா மைக்கை  எடுத்து, பப்ளிக் முன்னால பெண்களை ஆபாசமா பேசல. இது தனிப்பட்ட உரையாடல் என்று ஒரு காரணத்தை சொன்னாலும் கூட,  நம்முடைய கட்சியினுடைய அடிப்படை என்பது ஒழுக்கம். அதிலே யாரும் தப்ப முடியாது, எந்த மாற்று கருத்தும் இல்லை. சூர்யா சிவா அவர்களோ அல்லது  டெய்சி சரண் அவர்களோ இது தனிப்பட்ட உரையாடல் என்கின்ற காரணத்தை சொன்னாலும் கூட விட போவது கிடையாது என அதிரடி காட்டினார்.

Categories

Tech |