ஸ்கூபா டைவிங் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக நீச்சல் குளம் ஒன்றை ஹாங்காங் அரசு வடிவமைத்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள மக்கள் ஸ்கூபா டைவிங்கிற்காக தைவான் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தைவான் அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மக்கள் ஹாங்காங்கிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஸ்கூபா டைவிங் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் ஹாங்காங் அரசு 82 அடி நீள நீச்சல் குளத்தை வடிவமைத்துள்ளது. மேலும் அதில் தைவான் நாட்டு ஆழ்கடல் சுற்றுலா தலங்களின் புகைப்படங்களும் அட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஆமைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.