Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது எனக்கு சொந்தமானது.. அடித்துக் கொண்ட அண்ணன் தம்பி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே தகராறு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனைக்கட்டு பகுதியில் இருக்கும் அவர்களின் நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அடுத்து  ஆரோக்கியசாமியின் தம்பியான ஜான்பால் அங்கு சென்றபோது இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தம்பியான ஜான்பால் ஆரோக்கியசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த மகன் சின்னப்பனையும் ஜான்பால் தாக்கியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து சின்னப்பன் காவல் நிலையத்தில் ஜான்பால் மற்றும் அவரது மனைவியான விமல்ராணி ஆகிய இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜான்பால மற்றும் அவரது மனைவி இருவரும் நிலப்பிரச்சினை குறித்து ஆரோக்கியசாமி குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இரு வழக்கையும் பதிவு செய்த காவல்துறையினர் நிலம் பிரச்சனைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |