Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நெல்லை தொகுதி தலைவர் இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து 48, 49-வது வார்டு ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா உரையாற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் பொருளாளர் முகமது காசிம் நன்றி கூறினார்.

Categories

Tech |