மேலாத்தூர் சிறுபாலத்தை சீரமைக்க கோரி SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலாத்தூர் பஞ்சாயத்தில் முத்து வீரன் பாலம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வெள்ளகோவில், சுகந்தலை, குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் ஓன்று ஆபத்தான நிலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பாதை வழியாக பள்ளி பேரூந்துகள் செல்ல முடியாததால் மரந்தலை வழியாக சுற்றி செல்கின்றன. இதனை சீரமைக்க கோரி முத்துவீரன் பாலம் ஊர் பொதுமக்கள் மேலாத்தூர் பஞ்சாயத்தில் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்செந்தூர் தொகுதி மேலாத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த முத்துவீரன் பாலம் என்ற கிராமத்தில் வெள்ளகோவில் மற்றும் குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறு பாலம் ஓன்று மிக ஆபத்தானதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.
இதனை சீரமைக்க கோரி முத்துவீரன் பாலம் ஊர் பொதுமக்கள் மேலாத்தூர் பஞ்சாயத்தில் பலமுறை முறையிட்டும், பத்திரிகை செய்தி மூலமாகவும் கிட்ட தட்ட ஒரு வருடமாக பொதுமக்கள் போராடியும் பலனில்லாமல் இருப்பதாக சுற்று புற மக்கள் வேதனை அடைகின்றனர். எனவே இந்த சிறு பாலத்தில் விபத்து நேரிடாமலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், பொது மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக சிறு பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்க் அவசரகோரிக்கை மனுவாக உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.