விழுப்புரம் மாவட்டத்தில் 1,602 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மரக்காணம் வட்டம் அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி உட்பட ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அத்துடன் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்ட குளம் மற்றும் பூங்காவையும் முதலமைச்சர் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கேபி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.