Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதென்ன அத்தியாவசிய பொருளா…? ஆத்திரமடைந்த தாசில்தார்….. 3 கடைகளுக்கு சீல்…!!

செங்கல்பட்டில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கடைகளை சீல் வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட், உதயம் ஜவுளி கடை, ஷரிபா பாத்திரகடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து விற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த வணிக வளாகத்தில் சமூக விலகளும் கடைபிடிக்க படாமல் அத்தியாவசியப் பொருள்களற்ற பாத்திரம், துணி உள்ளிட்டவையும் விற்கப்படுவதாக தாசில்தாருக்கு புகார் சென்றது.

இதையடுத்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட தாசில்தார் அனுமதியின்றி துணி பாத்திரம் ஆகியவை விற்கப்படுவதை கண்டு ஆத்திரமடைந்து, கடைக்கு சீல் வைத்து சென்றார்.  அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்தாலோ, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |