Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அந்த கடைக்கு “சீல்”வைத்துள்ளனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை இனி விற்பனை செய்தால் கடைகளுக்கு “சீல்” வைக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |