சாராயம் விற்பனை செய்வதற்காக பாலித்தீன் பைகளை வழங்கிய மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 5 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் சாராயத்தை பாக்கெட்டுகளில் வைத்து விற்பதற்கு தேவைப்படுகின்ற பாலித்தீன் பைகளை மளிகை கடையில் வாங்கியதாக கூறியுள்ளனர்.
அதன் பின் கடைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரமேஷ் என்பவரின் கடையில் ஏராளமான பாலித்தீன் பைகள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாராய விற்பனைக்காக அவற்றை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் பாலித்தீன் பைகளை கொடுத்த குற்றத்திற்காக மளிகை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.