Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிர்ச்சியில் தம்பிகள் …… ”சீமான் கைது , சிறை உறுதி”….. மேலும் 2 வழக்கு பாய்ந்தது …..!!

அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1 மாதத்துக்கு முன்பு மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புடன் தமிழகத்தில் நாங்குநேரி , விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காந்திநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்றோடு தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. திமுக , அதிமுக மற்றும் நாம் தமிழர் என மும்முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் சீமான் அதிமுக , திமுக என கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் அலிபாபாவும் 40 திருடர்களும் என்று தமிழக அரசை விமர்சித்து , அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாக காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று சீமான் பேசியது பெரும் சர்சைக்குள்ளான நிலையில் தற்போது 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சீமான் விரைவில் கைது செய்யப்பட்டு சிறை செல்லும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |