நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்துக்கு தினமும் ரயிலில் வந்து இறங்குகின்றார்கள். எங்கு பார்த்தாலும் வட இந்தியர்களாகவே இருக்கின்றார்கள். இனிமேல் தமிழகத்தில் தமிழர்களுக்கு பிச்சை எடுக்கும் வேலை கூட கிடைக்காது.
மோடி ஆட்சியில் இருந்து இறங்குவதற்குள் மேலும் 50லட்சம் பேர் வந்துவிடுவார்கள். அவர்கள் பாஜகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள், காங்கிரஸ்க்கு கூட வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சென்னையில் சங்கீதா என்று ஒரு உணவு விடுதி இருக்கிறது. சங்கீதா விடுதியின் உரிமையாளர் முரளி அவர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தோம், அவர் என்ன சொல்கிறார் ? என்றால், எல்லாருமே நிறுவனத்தில் வட இந்தியர்கள் தான் வேலை செய்கிறார்கள்.
சீமான் நீங்கள் சொல்வது சரிதான், நான் ஏற்கிறேன், இன்னைக்கே எல்லாரையும் வெளியேற்றி விடுகிறேன், 40,000 மாத சம்பளம் கொடுக்கிறேன், தாங்குவதற்கு வீடு கொடுத்து விடுகிறேன், பிள்ளைகளை நான் படிக்க வைத்து விடுகிறேன், உங்கள் ஆட்களை வேலைக்கு வர சொல்லுங்கள். நாளைக்கே வர சொல்லுங்கள், இன்னைக்கு எல்லாரும் அனுப்பி விடுகிறேன் என்கிறார்.
நம்மிடம் ஆள் எங்கு இருக்கிறது? யார் வருவார்கள்? என்ன ஆனாலும் சரி நம் மண்ணை விட்டு நகர கூடாது. நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம், இனம் அழிந்து போய்விடும் என தெரிவித்தார்.